தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! நடராசர் தியானசபை, நெய்வேலி
- தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! நடராசர் தியானசபை, நெய்வேலி

INTRODUCTION

Natarajar Dhyanasabai Neyveli,
Sivapuram Complex,
Vellore Salai, Block-16,
Neyveli-607801.

email: ndsneyveli@gmail.com

This site is being hosted and maintained by Panniru Thirumurai Valarchi Kazhagam, Neyveli

NEWS

அருள்மிகு அழகிய திருச்சிற்றம்பலமுடையான் திருக்கோயில், சிவபுரம், வட்டம்-16, நெய்வேலி நகரம்

திருமுறைப் போட்டிகள் 2016

பன்னிரு திருமுறை வளர்ச்சிக்கழகம், நெய்வேலி பள்ளி மாணவர்களிடையே ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் திருமுறைப் போட்டிகள் வரும் சனவரி-2017-ல் கீழ்காணும் நிரற்படி நடைபெற உள்ளன. போட்டிக்கான பாடத்திட்ட புத்தகங்கள் ஆலய அலுவலகத்தில் கிடைக்கும்.
போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் தங்களது பெயர், பிரிவு போன்ற விவரத்தினை ஆலய அலுவலகத்திலோ அல்லது 9442174694 என்ற கைபேசி எண்ணுக்கு 10.01.2017 தேதிக்குள் குறுஞ்செய்தி மூலம் (SMS) அனுப்பியோ பதிவு செய்து கொள்ளலாம்

எடுத்துக்காட்டு NAME <SPACE> GROUP-A

பாடத்திட்ட புத்தகத்தின் விலை
(1)           ஒப்புவித்தல் போட்டி ரூ.15/-
(2)           எழுத்துப் போட்டி - ரூ.15/-

போட்டி நடைபெறும் நாள் மற்றும் இடம் பற்றிய விவரங்கள்

பிரிவு
போட்டி விவரம்
வகுப்பு
நாள் & நேரம்
நடைபெறும் இடம்
A
திருமுறை ஒப்புவித்தல் போட்டி
3,4,5 ஆம் வகுப்புகள்
28.01.2017
சனிக்கிழமை மாலை 05.00 மணி
திருமுறை அரங்கம்
B
1,2 ஆம் வகுப்புகள்
29.01.2017
ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி
அருள்மிகு நடராசர் தியான சபை
C
6,7,8 ஆம் வகுப்புகள்
29.01.2017
ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி
திருமுறை அரங்கம்
D
இசைப் போட்டி
6 முதல் 10 ஆம் வகுப்புகள்
29.01.2017
ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணி
திருமுறை அரங்கம்
E
இசை விருதுப் போட்டி
வயது வரம்பில்லை
29.01.2017
ஞாயிற்றுக்கிழமை மாலை 05.00 மணி
திருமுறை அரங்கம்
F
திருமுறை எழுத்துப் போட்டி
1 முதல் 8 ஆம் வகுப்புகள்
05.02.2017
ஞாயிற்றுக்கிழமை காலை 09.00 மணி
சவகர் பள்ளி (மெட்ரிக்) வட்டம்-17

செயலாளர்

பன்னிரு திருமுறை வளர்ச்சிக்கழகம், நெய்வேலி


14.09.2016: பிரதோஷம், 29, ஆவணி, புதன்கிழமை மாலை 04.30 மணி

15.09.2016: அருள்மிகு நடராசர் நன்னீராட்டு விழா, 30, ஆவணி, வியாழக்கிழமை மாலை 06.00 மணி

16.09.2016: பௌர்ணமி அபிஷேகம் (திரவியம்-நாட்டுச்சக்கரை), 31, ஆவணி, வெள்ளிக்கிழமை மாலை 05.00 மணி

19.09.2016: சங்கடஹர சதுர்த்தி, 03, புரட்டாசி, திங்கள் கிழமை மாலை 06.00 மணி

21.06.2016: கிருத்திகை, 05, புரட்டாசி, புதன்கிழமை மாலை 06.00 மணி

23.09.2016: தேயிபிறை அஷ்டமி திதி, 05, புரட்டாசி, வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணி

28.09.2016: பிரதோஷம், 12, புரட்டாசி, புதன்கிழமை மாலை 04.30 மணி

29.09.2016: மாத சிவராத்திரி, 13, புரட்டாசி, வியாழக்கிழமை மாலை 06.00 மணி நவராத்திரி ஆரம்பம்

01-10-2016: நவராத்திரி ஆரம்பம், 15 புரட்டாசி, சனிக்கிழமை

10-10-2016: சரஸ்வதி பூஜை, 24, புரட்டாசி, திங்கள்கிழமை மாலை 06.00 மணி

11-10-2016: விஐயதசமி,ஜெயதுர்க்கா தேவிக்கு சந்தனக்காப்பு, 25, புரட்டாசி, செவ்வாய்க்கிழமை 

13-10-2016: பிரதோஷம், 27, புரட்டாசி, வியாழக்கிழமை மாலை 04.30 மணி

14-10-2016: நடராசர் நன்னீராட்டு, 28, புரட்டாசி, வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணி


15-10-2016: பௌர்ணமி அபிடேகம் (திரவியம்-அப்பம்), 29, புரட்டாசி, சனிக்கிழமை மாலை 06.00 மணி

இலவச தேவார இசை வகுப்பு:

நடைபெறும் நாட்கள்: 11.09.2016 ஞாயிறு; 18.09.2016 ஞாயிறு; 25.09.2016 ஞாயிறு
நேரம்: காலை 10.00 மணி
ஆசிரியர்: தேவார இசை மணி பண்ணிசை புலவர் கலைமாமணி சிவத்திரு திருத்தணி N. சுவாமிநாதன் அவர்கள்..அனைவரும் வருக 
***

துர்முகி வருடம் ஆடி மாதம் 18ம் தேதி (02-08-2016) வாக்கிய பஞ்சாங்கப்படியும் ஆடி மாதம் 27ம் தேதி (11-08-2016) அன்று குரு பெயர்ச்சி நடைபெறுகிறது. குரு பகவான் சிம்ம ராசியில் இருந்து கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.
குருபகவானை பற்றி தெரிந்து கொள்ளுவோம்!!
வியாழன் குரு பொன்னவன் ஆங்கீரசன் ஜீவன் வர்ணிக்கப்படும் குரு பகவான் 
ஜாதகத்தில் தனகாரகன் புத்திரகாரகன் வர்ணிக்கப்படும் குரு பகவான் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் வாழ்நாள் முழுவதும் ஜீவன கஷ்டம் வராது. குடும்பமும் நல்ல முறையில் இருக்கும். ஜாதகத்தில் குரு ஆட்சி உச்ச நிலையில் இருந்தால் ஜாதகரின் கடைசி காலம் வரை யாரையும் நம்பி வாழ வேண்டிய சூழ்நிலை வராது.
குரு பெயர்ச்சி பற்றி சொல்லும் பொழுது

ஜென்ம ராமர் வனத்திலே சீதையை சிறை வைத்ததும்
தீதிலாதொரு முன்றிலே துரியோதனன் படைமாண்டதும்
இன்மை யெட்டினில் வாலி பட்டமிழந்ததும்
ஈசனரொரு பத்திலே தலையோட்டிலே இரந்துண்டதும்
தர்மபுத்திரர் நாலிலே வனவாசம் போனதும்
சத்தியமாமுனி யாறிலே இருக்கையில் தளை பூண்டதும்
வன்மையுற்றிட ராவணன் முடி பன்னிரண்டில் விழ்ந்ததும் 
                                                            - என்பது பழம் பாடல்.
மேற்கண்ட பலன்கள் அப்படியே நடக்கும் என்பது உறுதியில்லை.

அருள்மிகு அழகிய திருசிற்றம்பலமுடையான் திருக்கோயில், வட்டம்16, நெய்வேலியில் துர்முகி வருடம் ஆடி 18ந் தேதி (02.08.2016) செவ்வாய்க் கிழமை 09.30 மணிக்கு குருபகவான் சிம்ம ராசியிலிருந்து கன்யாராசிக்கு பிரவேசம் செய்வதையொட்டி, காலை 08.00 மணிக்கு அபிஷெகமும் காலை 09.30 மணிக்கு மஹாதீபாரதனையும் நடைபெறும்

  பொதுத்தேர்வெழுதும் மாணவர்களுக்கான கூட்டு வழிபாடு: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்குச்செல்லும் மாணவர்களுக்கான கூட்டு வழிபாடு வரும் 21.02.2016 ஞாயிறு காலை 09.00 மணிக்கு நடைபெறும். தேர்வில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களும் இதில் கலந்துகொள்ளலாம். திடமான எண்ணம், அவசரமில்லாத அமைதியான சிந்தனை, தெளிவாக முடிவெடுத்தல் போன்றவைகளை ஏற்படுத்திக்கொள்ள கூட்டு வழிபாடு நடைபெறும்.
***

  எதிர்வரும் 20.02.2016 மாலை 04.00 மணிக்கு தொடங்கி சனிப்பிரதோஷ பூசைகள் நடைபெறும். மாலை 06.00 மணிக்கு மகா தீபாராதனையும் தொடர்ந்து சுவாமி அம்பாள் பிரகார உலாவும் நடைபெறும்.
***


  - ஒப்புவித்தல் போட்டிக்கான முதல் பயிற்சி வகுப்பு 10.01.2016 அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற்றது. பண்ணிசைமணி திருத்தணி திரு.சுவமிநாதன் அவர்கள் பயிற்சி அளித்தார்கள். அடுத்த பயிற்சி வகுப்பு பொங்கல் பண்டிகை காரணமாக, அறிவித்த தேதியில் நடைபெறாது. அடுத்த பயிற்சி வகுப்பு 24.01.2016 நான்காவது ஞாயிறன்று நடைபெறும்.
***

 ஒப்பிவித்தல் போட்டிக்கான பயிற்சி வகுப்புகள் 10.01.2016 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு திருமுறை அரங்கில் தொடங்கவுள்ளது. அதனைத் தொடர்ந்து 17.01.2016, 24.01.2016 மற்றும் 31.01.2016 ஆகிய ஞாயிற்று கிழமைகளிலும் அதே நேரத்தில் நடைபெற உள்ளன. ஒப்பிவித்தல் போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து மாணவர்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம். இந்த வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற பெயரைப் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை.
***

  -  பன்னிரு திருமுறை வளர்சிக் கழகம் நடத்தும் திருமுறை இலவச வகுப்பின் நிறைவு 27.12.2015 காலை 10.00 மணிக்கு தொடங்கி நடந்தது. ஒரு ஆண்டின் தொகுப்பாக நடைபெற்ற இவ்வகுப்பின் நிறைவு எளிய விழாவாக நடந்தது. ஆசிரியருக்கு சங்க சார்பில் பொன்னாடை அணிவிக்கப்பட்டு பழங்களுடன் சம்பாவணையும் வழங்கப்பட்டது.  நால்வர் நற்பணி மன்ற செயலாளர் திரு.இராஜேந்திரன் பொன்னாடை அணிவித்தார். நிறைவில் ஆசிரியரின் ஆசியுரைக்குப்பின் இந்த ஆண்டிற்கான வகுப்பு நிறைவுற்றது.
***

   - 26.12.2015 அதிகாலை ஆருத்ரா தரிசனம் என்றழைக்கப்படும் திருவாதிரைத் திருநாள் மிகச்சிறப்பாக நடந்தேறியது. காலை 04.30 மணிக்கு அருள்மிகு ஓசை கொடுத்த நாயகி உடனாய நடராசப் பெருமானுக்கு திருன்னீராட்டு (மஹாபிஷெகம்) தொடங்கி சுமார் இரண்டரை மணி நேரம்  நடந்தது. பின்னர் காலை 08.00 மணியள்வில் மாணிக்கவாசகர் திருசுற்று உலா வந்த பின்னர் அவருக்கு நடராசர் திருக்காட்சி தரும் தரிசனத்தை ஏராளாமான மெய்யன்பர்கள் பரவசத்துடன் கண்டு பேரானந்தம் கொண்டனர். தொடர்ந்து திருவாதிரைக்களி பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் சுமார் ஐயாயிரம்பேர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழா ஏற்ப்பாடுகளை பன்னிரு திருமுறை வளரிச்சிக் கழகத்தின் மேற்பார்வையில் நால்வர் நற்பணி மன்றத்தினர் சிப்பாக செய்திருந்தனர். இன்று மாலையில் சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட ஆடைகள் பகிரங்க ஏலம் விடப்படுகின்றன.
***

  - ஒவ்வொரு ஆண்டும் ஆருத்ர தரிசன நாளில் சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட ஆடைகள் (வஸ்திரங்கள்) அடியார்கள் முன்னிலையில் பகிரங்க ஏல்ம் விடப்படும். இந்த ஆண்டும் 26.12.2015, சனிக்கிழமை மாலை 06.00 மணிக்கு இந்த ஏல நிகழ்வு நடைபெற உள்ளது. பொது மக்கள் அனைவருமே இதில் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
***

  - உழவாரப்பணிகள்: 26.12.2015 அன்று நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஆலய வளாகத்தை தூய்மை செய்ய, நெய்வேலி நால்வர் நற்பணி மன்றத்தினருடன் இணைந்து சேலம் அன்பர்கள் மேற்கொள்ளும் உழவாரப்பணி 24.12.2015 காலை 06.00 மணி தொடங்கி நடைபெற உள்ளது. அற்பணிப்புடன் மேற்கொள்ளப்படும் இப்பணியில் ஒத்த கருத்துடைய மெய்யன்பர்களும் கலந்து கொள்ளலாம்.
***

  - ஆருத்ரா தரிசனப் பணிகள் பந்தல்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. 26.12.2015 அன்று அதிகாலை திருவாதிரைத் திருநாள் ஆடல்வல்லானின் அருங்க்காட்சி (ஆருத்ரா தரிசனம்) நிகழும்.
***

  - பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், பைந்தமிழ் இசைப்பாவலர் திருத்தணி திரு.என்.சுவாமிநாதன் நடத்தும் இலவச தேவார இசை வகுப்பின் தொடர்வகுப்பு வரும் 27.12.2015 ஞாயிறு காலை 10 மணிக்கு திருமுறை அரங்கில் நடைபெறும். இந்த் ஆண்டின் இறுதி வகுப்பு இதுவாகும்.
***

 - 23.12.2015 அன்று மாலை 04.30 ம்ணியளவில் பிரதோஷ பூசை நடைபெறும்.
***

  - நாங்காவது சோமவார சங்காபிடேகம் 14.12.2015 அன்று மாலை நடந்தேறியது. இரவு 07.30 மணிக்கு ம்கா தீபாரதனையும் தொடர்ந்து பிரசாதமும்  வழங்கப்பட்டது. ரூ.100.00 செலுத்தி கலந்துகொண்ட மெய்யன்பர்களுக்கு சிறப்பு பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
***

  - முக்கிய அறிவிப்பு: நெய்வேலி பள்ளி மாணவர்களிடையே பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழகம் நடத்தும் திருநெறிய தமிழ்ப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. (அரையாண்டுத் தேர்வுகள் மழை வெள்ளத்தால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால்). தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்ட பின்னர் போட்டிக்கான தேதிகள் அறிவிக்கப்படும். மேற்படி காரணத்தினால் இசை மற்றும் இசைவிருதுப் போட்டிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இவைகளுக்கான போட்டித்தேதிகளும் பின்னர் அறிவிக்கப்படும்.
***

  - பன்னிரு திருமுறை வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், பைந்தமிழ் இசைப்பாவலர் திருத்தணி திரு.என்.சுவாமிநாதன் நடத்தும் இலவச தேவார இசை வகுப்பின் தொடர்வகுப்பு வரும் 13.12.2016 ஞாயிறு காலை 10.00 மணிக்கு திருமுறை அரங்கில் நடைபெறும்.
***

  - ஒவ்வொரும் ஆண்டும் 4வது சங்காபிஷேகத்தை மெய்யன்பர்கள் ஒன்றிணைந்து நடத்துவார்கள். இந்த ஆண்டு 14.12.2015 அன்று  இந்நிகழ்வு நடைபெறும். இதில் கலந்துகொள்ள ரூ.100.00 செலுத்தி தங்களது பெயரினைப் பதிவு செய்து கொள்ளவும்.
***
   -  26.12.2015 அன்று அதிகாலை 05.00 மணிக்கு திருவாதிரைத் திருநாள் என்னும் ஆருத்ரா தரிசனம் நடபெறும். அருள்மிகு நடராசப்பெருமானுக்கு மகா நன்னீராட்டு (மகாபிஷேகம்) நடைபெறும். 17.12.2015 முதல் திருப்ப்ள்ளியெழுச்சி சிறப்புபூசை மார்கழி மாதம் முழுவதும் நடைபெறும்.
***
  - 17.12.2015 முதல் 25.12.2015 வரை மாணிக்கவாசகரை சிற்ப்பிக்கும் சிறப்பு திருவெம்பாவை உற்சவம் நடைபெறும்.
***
  - 07.12.2015 அன்று மாலை மூன்றாவது சோமாவார சங்காபிஷேகம் நடைபெறும்.
***
  - 30.11.2015 அன்று மாலை இரண்டாவது சோமாவார சங்காபிஷேகம் நடைபெற்றது.

***
  - 29.11.2015, ஞயிறு காலை 10 மணிக்கு இலவச தேவார இசை வகுப்பு நடைபெற்றது. இடம்: திருமுறை அரங்கம், சிவபுரம், வட்டம்-16, நெய்வேலி


*****


   - சுந்தரமூர்த்தி நாயனார் அவதரித்த திருநாவலுர் ஆலயம் கற்றளியாக மாற்றப்படுகிறது. அதில் பிரதிட்டை செய்வதற்க்கு சுந்தரரின் 4-அடி பஞ்சலோக சிலை சுமார் 90-கிலொ எடையில் வடிக்கப்பட்டுள்ளது. 29.11.2015 அன்று நண்பகல் 12-ம்ணிக்கு நெய்வேலி நடராசர் ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்டு சிறப்பு பூசை செய்து பின்னர் கொண்டு செல்லப்பட்டது.




1 comment:

  1. அற்புதமாக உள்ளது. ஆலய நிகழ்வுகள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுவது பாராட்டுக்குரியது. ஆலய அறிவிப்புகளை தெரிந்து கொள்ளவும் வசதியாக உள்ளது.தமிழில் உள்ள அறிவிப்புகளில் எழுத்துப்பிழைகளைத் தவிர்க்கலாம்.

    ReplyDelete