அருள்மிகு நடராஜர் தியானசபை, நெய்வேலி
எதிர்வரும் இரண்டு பிரதோஷ நாட்கள்
26.10.2023, ஐப்பசி 09ம் நாள், வியாழக்கிழமை
10.11.2023, ஐப்பசி 24ம் நாள், வெள்ளிக்கிழமை
பிரதோஷ நாட்களில் மாலை 4.30 மணி தொடங்கி பிரதோஷ பூஜை நடைபெறும்.
சாயரட்ச பூஜையில் மகாதீபாராதனையும், தொடர்ந்து பிரதோஷ நாதர் பிரகார உலாவும் நடைபெறும்.
பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ள ரூ.120/- செலுத்திப் பெயரினைப் பதிவு செய்து டோக்கன் பெற்றுக் கொள்ளவும்.
பிரகார உலா நிறைவுற்றதும் டோக்கனை செலுத்தி பிரசாதம் பெற்றுக் கொள்ளலாம்.
வெளியூர் அன்பர்கள் கூடுதலாக ரூ.50/ சேர்த்து ரூ .170/- அனுப்பினால் தூதஞ்சல் ( கூரியர் ) மூலம் பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.
தொகை அனுப்ப வேண்டிய தொலைபேசி எண். 9443482023.
தேய்பிறை அஷ்டமி பூசை
வரும் 05.11.2023, ஞாயிற்றுகிழமை அன்று மாலை 6 மணிக்கு தேய்பிறை அஷ்டமி பூசை நடைபெற உள்ளது.
மேற்படி பூசையில் கலந்துகொண்டு பிரசாதம் பெற விரும்பும் பக்தர்கள் ரூ.120/- செலுத்தி பெயரினை பதிவு செய்து டோக்கன் பெற்றுக் கொள்ளவும்.
நேரடியாக வரமுடியாதவர்கள் (9443482023)என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு ரூ. 170/- ஆன்லைன் மூலமாக செலுத்தி பெயரினை பதிவு செய்து கொள்ளலாம். தெரிவிக்கும் முகவரிக்கு, பிரசாதம் அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.
No comments:
Post a Comment