தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! நடராசர் தியானசபை, நெய்வேலி
- தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி! நடராசர் தியானசபை, நெய்வேலி

INTRODUCTION

Natarajar Dhyanasabai Neyveli,
Sivapuram Complex,
Vellore Salai, Block-16,
Neyveli-607801.

email: ndsneyveli@gmail.com

This site is being hosted and maintained by Panniru Thirumurai Valarchi Kazhagam, Neyveli

Wednesday, 26 August 2026

திருச்சிற்றம்பலம்


அருள்மிகு நடராசர் தியானசபை - நெய்வேலி.


ஆவணி - நடராசர் மகாபிடேகம்

YouTube நேரலை ஒளிபரப்பு.


நெய்வேலி அருள்மிகு நடராசர் ஆலயத்தில் இன்று (26.08.2026), மாலை நடைபெறும் ஆவணி மகாபிடேகம், ஆலய YouTube சேனலில் நேரலை செய்யப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.


கீழ்க்காணும் இணைப்பைத்தொட்டு நேரலையைக் காணவும்.


https://www.youtube.com/live/aCgsHfLZOgk?si=oC2-wBmnKxXFwMbf

Monday, 23 October 2023

அன்னாபிஷேக விழா

 

மெய்யன்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு

 

வரும் 28.10.2023, சனிக்கிழமை அன்று, சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்நிகழ்வினை ஒட்டி, நமது ஆலய நடைமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

 வழக்கமாக, மாலை 4 மணிக்குத் தொடங்கி, இரவு 8 மணிக்கு மகாதீபாராதனையுடன் நிறைவுறும் அன்னாபிஷேக நிகழ்வு முன்னதாகவே 2 மணிக்குத்தொடங்கி, மாலை 4.30 மணிக்கு மகாதீபாராதனையுடன் நிறைவுற்று, அன்னம் கலைத்து பிரசாதமாக வழங்கப்படும்.

 6.15 மணிக்கு நடைபெறும் திருமூலர் நன்னீராட்டு, முன்னதாகவே 5 மணிக்கும், இரவு 8.30 மணிக்கு நடைபெறும், குறுந்தேர் பிரகார உலா, மாலை 6.15 மணிக்கும் நடைபெறும்.

 மாலை 6, இரவு 8, இரவு 9 மணி ஆகிய நேரங்களில் நடைபெறும் கால பூசை நிகழ்வுகள், இந்த மூன்று கால பூசைகளுமே மாலை 7 மணிக்குள் நிறைவுறும். இறை தரிசனத்திற்காக ஆலயம் 9 மணி வரை திறந்திருக்கும்.

 கால பூசைகள் நிறைவு பெற்ற பின்  திருமூலர் குருபூசைக்கான சிறப்பு நிகழ்ச்சியாக சொற்பொழிவு மாலை 7 மணிக்கு நடைபெறும்.