மெய்யன்பர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு
வரும் 28.10.2023, சனிக்கிழமை
அன்று, சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இந்நிகழ்வினை ஒட்டி, நமது ஆலய நடைமுறைகளில் சில
மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
வழக்கமாக, மாலை 4 மணிக்குத்
தொடங்கி, இரவு 8 மணிக்கு மகாதீபாராதனையுடன் நிறைவுறும் அன்னாபிஷேக நிகழ்வு முன்னதாகவே
2 மணிக்குத்தொடங்கி, மாலை 4.30 மணிக்கு மகாதீபாராதனையுடன் நிறைவுற்று, அன்னம் கலைத்து
பிரசாதமாக வழங்கப்படும்.
6.15 மணிக்கு நடைபெறும் திருமூலர்
நன்னீராட்டு, முன்னதாகவே 5 மணிக்கும், இரவு 8.30 மணிக்கு நடைபெறும், குறுந்தேர் பிரகார
உலா, மாலை 6.15 மணிக்கும் நடைபெறும்.
மாலை 6, இரவு 8, இரவு 9 மணி
ஆகிய நேரங்களில் நடைபெறும் கால பூசை நிகழ்வுகள், இந்த மூன்று கால பூசைகளுமே மாலை 7
மணிக்குள் நிறைவுறும். இறை தரிசனத்திற்காக ஆலயம் 9 மணி வரை திறந்திருக்கும்.
கால பூசைகள் நிறைவு பெற்ற
பின் திருமூலர் குருபூசைக்கான சிறப்பு நிகழ்ச்சியாக
சொற்பொழிவு மாலை 7 மணிக்கு நடைபெறும்.
No comments:
Post a Comment