மகா சிவராத்திரி விழா
20.02.2012 திங்கட்கிழமை இரவு மகா சிவராத்திரி விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
அருள்மிகு செம்பொற்சோதிநாதருக்கு நான்கு கால நன்னீராட்டு ஆராதனையும், அருள்மிகு அழகிய திருச்சிற்றம்பலவருக்கு சிறப்பு அர்ச்சனையும் நடைபெற்றது.
நெய்வேலி நடனப்பயிற்சிப் பள்ளிகளின் மாணவர்கள் நடத்திய நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியும், நெய்வேலிவாழ் சிவனடியார்கள் நடத்திய திருவாசக முற்றோதல் நிகழ்ச்சியும் நடந்தேறின.
நிகழ்ச்சிகளை நெய்வேலி பன்னிரு திருமுறை வளர்ச்சிக்கழகத்தார் சிறப்பாக செய்திருந்தனர்